ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 

முதியோர் கல்வித்திட்டம்

^

English Version

பீல் ஆதிவாசி மக்களில் 80% -க்கும் அதிகமானோர் எழுதப்படிக்க தெரியாதவர்கள்.  அதற்கு பல காரணங்கள் உண்டு.  கல்வியறிவு இல்லாமை காரணமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் உலகத்திற்கடுத்த அநேக காரியங்களை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.  மூடப்பழக்க வழக்கத்திலும், அறியாமையிலும் மூழ்கி குடித்து வெறிப்பதிலும், சண்டையிடுவதிலும், திருடுவதிலும் வாழ்க்கையைக் கழித்து வருகிறார்கள்.  இப்போது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பு பாவத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்று ஆயிரமாயிர மக்கள் தேவனை ஆராதித்து வருகிறார்கள்.

     

ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஆதிவாசி விசுவாசிகள் வேதபுத்தகத்தை நேசித்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.  தேவ கிருபையால் 12 ஆயிரத்திற்கும் மேலாக வேதப்புத்தகங்கள் சொற்பமான விலையில் விற்கப்பட்டுள்ளது.  ஆனால் வேதப்புத்தகத்தை வாசிக்க முடியவில்லை என்றும், எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்துவிட்டோமே என்றும் வருந்தியவர்கள் அநேகர்.  கடந்த 2001 ஜுலை மாதம்  Seva Bharat மூலமாக டாக்டர். சிரஞ்சீவி மற்றும் டாக்டர். கமலா அவர்களும் நம்முடைய (பணித்தளங்களை) மூன்று மாநிலத்திலும் பார்வையிட்டு முதியோர்  கல்வித் திட்டத்திற்கான பயிற்சியை 150 கிராமங்களில் நடத்த 150 பயிற்சியாளர்களை பயிற்றுவித்தார்கள்.  அதைத் தொடர்ந்து 1 வருட பயிற்சி சிறப்பாக 150 கிராமங்களில் 30, 30 பேர்களுக்காக நடைபெற்றது.  அதன்பின்பு தொடர் ஆண்டுகளில் மேலும் Project கொடுக்கப்பட்டு தேவ கிருபையால் சுமார் 450 கிராமங்களில் 600 மையங்கள் தெரிந்தெடுத்து முதியோர் கல்வித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.  சுமார் 10,000-க்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் விளைவாக கல்வி, மருத்துவம், சமூக, பொருளாதார அடிப்படையில் விசுவாசிகள் மற்றும் கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்றார்கள்.  பீடி, சாராயம் குடித்தல், திருடுதல் பிற குற்றங்களை புரிதல் போன்ற பழக்கவழக்கங்களிலிருந்தும், மூட பழக்கங்களிலிருந்தும் மக்கள் திருந்தி வருவதை சமுதாயத்தில் காண்கிறோம்.

 

     

மேலும் பிள்ளைகளை படிக்க அனுப்பவும், வேதப்புத்தகத்தை வாசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக சுதேச ஊழியர்களின் மனைவிமார்கள் அநேகர் வேதபகுதிகளை மனப்பாடம் செய்துள்ளார்கள்.  குறிப்பாக சங்கீதம் 119-ஐ மனப்பாடம் செய்துள்ளார்கள். ஆவியானவர் அவர்களின் பிரயாசங்களை ஆசீர்வதித்துள்ளார்.  தொடர்ந்து இப்பணிகளை செயல்படுத்த ஜெபியுங்கள்.

 

 

 

         
     
         
         
         

 

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு