-
சுதேச ஊழியர்களுக்கு ஜெபமுகாம், அத்தும ஆதாய
பயிற்சி முகாம், குடும்ப அக்கினி அபிஷேக முகாம் மற்றும் வேதாகம
பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.
-
ஸ்தல சபைகளை உருவாக்க ஒவ்வொரு சபையிலும் 7
மூப்பர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு சுமார் 4000 மூப்பர்களுக்கு
அபிஷேக முகாம் மற்றும் சபை வளர்ச்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.
-
வருடந்தோறும் சுமார் 3000 வாலிபர்களுக்கு
(ஆண், பெண்) ஆங்காங்கே பிரித்து சிறப்பு வல்லமை முகாம்கள்
நடத்தப்படுகிறது.
-
படிப்பறிவற்ற பெண்களையும் அபிஷேகத்திற்குள்
நடத்தி அவர்களை ஊழியத்திற்கு பயிற்சியளித்தல்.
-
இதுவரை 8000 வேதாகமங்கள், புதிய
ஏற்பாடுகள், சுவிசேஷ பங்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வேதாகம சங்கம் குஜராத் கிளை சிறப்பு விருதினை
வழங்கியுள்ளார்கள்.
-
குஜராத், இராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில்
1,200 ஆதிவாசி மாணவர்களுக்கான விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு கல்வி
அறிவும், வேத அறிவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
-
20,000 சிறுவர்களுக்கு வாரந்தோறும்
ஓய்வுநாள் பாடசாலை நடத்தப்படுகிறது. மேலும் வருடந்தோறும் இந்த
சிறுவர்களுக்கு CBC நடத்தப்பட்டு வருகிறது.
-
ஆண்டுதோறும் இலவச மருத்துவமுகாம்,
ஆரம்பசுகாதார பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
-
முதியோர் கல்வித்திட்டத்தின் மூலமாக 450
கிராமங்களில் முதியோர்களுக்கு எழுத, படிக்க பயிற்சி
கொடுக்கப்படுகிறது.
-
126 கிராமங்களில் CBN ஸ்தாபனத்தின் மூலமாக
ஆழ்குழாய் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.