English Version
|
01.07.1991 |
அன்று தான்
குஜராத் மாநிலத்தில் ஜாலோத் ஊருக்கு வந்து முதன் முதலாக ஷாலோம்
ஊழியப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அற்பமான அந்த நாளுக்கு முன்பாக
நாங்கள் தேவனால் உருவாக்கப்பட்ட நாட்கள் மறக்க இயலாதவையாகும். |
|
14.10.1979 |
அன்று நான் (சகோ. தேவதாஸ்)
இரட்சிக்கப்பட்டேன். |
|
04.11.1979
|
அன்று
கர்த்தர் என்னை பேர்சொல்லி அழைத்து ஊழிய அழைப்பையும் பரிசுத்த
ஆவியானவரின் அபிஷேகத்தையும் தந்தார |
|
07.11.1981 |
அன்று முழு
நேர ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்தேன். |
|
04.01.1982 |
முதல்
31.07.85 வரை 3 வருடங்கள் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் இணைந்து
வேதாகம பயிற்சி பெற்று வட இந்தியாவில் மிஷனெரி பணியாற்றுதல் |
|
08.071985 |
அன்று மிஷனெரி சகோதரி.
வஹிதாவுடன் திருமணம் |
|
01.08.1985
முதல்
30.06.90 வரை |
5 வருடங்கள் குடும்பமாக தரிசனமாகக் கண்ட பீல் ஆதிவாசி
மக்கள் மத்தியில் ஆத்துமாக்களை தேவனண்டை நடத்தி சபைகளை
உருவாக்குதல் |
|
01.07.1990 முதல் 15.12.1990
வரை |
01.07.1990 முதல் 15.12.1990 வரை EFICOR
ஸ்தாபனத்தில் 6 மாத சமூகப்பணி பயிற்சிபெறுதல் |
|
29.12.1990 |
நாலுமாவடி
“இயேசு விடுவிக்கிறார்” திறப்பின் வாசல் ஜெபத்தால் தாங்கப்படும்
ஊழியர்களாய் மற்றும் ஷாலோம் ஊழியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. |
|
|
CMC RUHSA நிறுவனத்தில் Health & Rural
Development Training 1 மாத பயிற்சி. |
|
22.02.1991 |
அன்று குஜராத்
வந்தடைந்தோம். |
|
01.07.1991 |
ஜாலோத்
பணித்தளம் வரும் வரை அதிகமான போராட்டங்கள், பிரச்சனைகள் தனிமையான
ஆத்துமாக்கள் அற்ற நிலைமை என பலவிதமான சூழ்நிலைகள் |
|
|
|
|
|
IMS எங்களை விடுவித்தபோது அனைத்து சபைகள்,
ஊழியங்கள், ஆத்துமாக்கள் மற்றும் அனைத்து தளவாடங்கள், உடமைகள்
முதலான ஒன்றையும் இச்சிக்காத வண்ணம் ஒப்புக்கொடுத்து வந்தோம்.
ஊழியர்களையும், ஆத்துமாக்களையும் பிரித்துவிடாதபடி இறுதிவரை
தேவனுக்காக IMS –ல் இருக்கும்படி ஆலோசனை கூறினோம். அடுத்த
தாலுகாவான ஜாலோத் சென்று ஊழியம் ஆரம்பிக்க திட்டமிட்டோம்.
அவ்வேளையில் என் மனைவிக்கு பிரசவகாலம் நெருங்கினபடியால்
பிரசவகாலத்திற்கு பின்பு முன் பணி செய்த துதியா ஊரைவிட்டு வெளியேற
வாக்களித்தோம். அமர்சிங் என்ற 8-வது வரை படித்த ஒரு பையனை வீட்டு
வேலைக்கு உதவி செய்ய அனுமதியுடன் வைத்திருந்தோம்.
|
|
|
|
|
தேவனிடத்தில் நீண்ட நாட்களாக ஆசையுடன் ஜெபித்த
பெண்குழந்தை “ஷாரோனை” தேவன் தந்தார். மிகவும் அழகான
குட்டிப்பாப்பா ஷாரோனைக் கண்டு என் பையன்கள் டைட்டஸ், ஷாலோம் அதிக
மகிழ்ச்சியுற்றார்கள். சில தினங்களில் 24.06.1991 அன்று குழந்தை
சுகவீனப்பட்டது. மருத்துவ வசதி சரியாக இல்லை. பரோடாவுக்கு கொண்டு
செல்ல மருத்துவர் கூறினார். கைகளில் பணமும் இல்லை. என்ன
செய்வதென்று தாகோத் ஊர் பேரூந்து நிலையத்தில் நின்று
கொண்டிருக்கும்போது “ஷாரோன்” எங்களை விட்டு பிரிந்துவிட்டதை
அறிந்தோம். 100 வருடங்களுக்கு முன்பு IP Mission மூலம் வந்த
மிஷனெரிகளின் கல்லறைக்கு அருகில் அவளை நல்லடக்கம் செய்தோம்.
டைட்டஸ், ஷாலோம்? “ஷாரோன்” பாப்பா எங்கே என வினவினார்கள்.
கர்தத்ர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். அவருக்கே ஸ்தோத்திரம்
என்று சொன்னோம். பிஞ்சு உள்ளங்களை தேவன் தேற்றினார். தமிழில்
ஆறுதல் கூற யாருமே இல்லை. தேவனே எங்களையும் தேற்றினார்.
இந்நிலையில் வீடு கிடைக்கவில்லை. ஜாலோத்
நகரத்தில் இறுதியாக “பேய்வீடு” என்று அழைக்கப்பட்ட வீடு ரூ.625/-
மாத வாடகையில் கிடைத்தது. ஆனால் அது பல வருடங்களாக ஆலயமாக
இருந்தது. கிறிஸ்தவர்கள் இல்லாதபடியால் ரூ.2000-க்கு
விற்கப்பட்டு குடியிருப்பாக மாறினது. அங்கு குடியேறிப் போனவர்கள்
பலர் மரித்து விடுவதால் “பேய் பங்களா” என்று அழைத்தார்கள்.
01.07.1991 அன்று பிள்ளைகளுடன் ஜாலோத் ஊரில்
கிடைத்த வீட்டில் ஜெபித்து உள்ளே சென்றோம். ஷாரோன் மரித்த வேதனை
ஒருபுறம் இருந்தது. தனிமையும், பணக் கஷ்டமும் மறுபுறம். சில
தினங்களுக்குப் பின் நாங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவர்
இயேசு எங்கள் அறையில் பிரசன்னமானார். “ஷாரோனைக் குறித்து கலங்க
வேண்டாம். என்னிடததில் இருக்கிறாள். கோதுமை மணி இந்த நிலத்தில்
விழுந்தபடியால் ஆயிரமாயிர குடும்பங்களை உங்களுக்குத் தருவேன்.
அற்புத அடையாளங்கள் மூலமாக என்னை பீல் மக்களுக்கு
வெளிப்படுத்துவேன்” என்று இயேசு கூறினார். அவ்வளவுதான்! எங்கள்
துக்கங்கள் மாறின! ஆண்டவர் சொன்னபடி வெள்ளிக்கிழமை கூட்டம்
ஆரம்பித்தோம்.
|
|
|
|
|
முதல் வாரக் கூட்டத்தில் ராம்சிங் பாய் என்ற
சாராயம் காய்ச்சும் குடும்பமும் சவ்ஜிபாய் என்ற மந்திரவாதி
குடும்பமும் ஜெபிப்பதற்காக வந்தார்கள். தேவன் இவர்களுக்குள்
இருந்த 21 வருட பிசாசின் கட்டுகளிலிருந்தும், நோய்களிலிருந்தும்
விடுதலை செய்தார். அதைத் தொடர்ந்து இவர்கள் கூறின சாட்சி மூலமாக,
அடுத்த வாரம் 20 பேர்கள் வந்தார்கள். குருடர்கள்
பார்வையடைந்தார்கள். செவிடர்கள் கேட்டார்கள். வியாதியஸ்தர்கள்
சொஸ்தமடைந்தார்கள். பிசாசு பிடியினின்றும் பாவத்தின்
பிடியினின்றும் அநேகர் விடுதலை பெற்றார்கள். அதைத் தொடர்ந்து 50,
60 பேர் ஒவ்வொரு வாரமும் பங்கெடுக்க ஆரம்பித்தார்கள்.
நான்கு மாதங்கள் கழிந்தது. சகொ.G.P.S.
ராபின்சன் அவர்கள் பணித்தளத்திற்கு வந்து சிறப்புக் கூட்டங்களை
நடத்தினார்கள். முதல் கூட்டத்தில் சுமார் 85 பேர் பங்கு
பெற்றார்கள். அநேக அற்புதங்கள் நடைபெற்றது. இரவு வீட்டில்
நடைபெற்ற கூட்டத்தில் சுதேச ஊழியர்கள், விசுவாசிகள் குறிப்பாக என்
மனைவி வஹிதாவும் பரிசுத்த ஆவியினால் அபரிவிதமாய் நிரப்பப்ட்டார்கள்.
.
சுதேச ஊழியர்களையும் தேவன் பயன்படுத்த
ஆரம்பித்தார். 14 கிராமங்களில் ஆராதனைக் குழுக்கள் உருவானது.
முதன்முறையாக கிறிஸ்துமஸ் மேளா (1991) நடத்தினோம். இயேசு பிறப்பின்
நற்செய்தியை முதன் முறையாக 300 பேர்கள் அறிந்துகொண்டு முதல்
உண்மையான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரித்தார்கள்.
1992 ஜுலை (1 வருடத்தில்) 7 சுதேச ஊழியர்கள்
ஒப்புக் கொடுத்தார்கள்.
12 மாதங்களில் சுமார் 500 பேர் ஆண்டவரை
ஏற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தேவன் தந்த
வளர்ச்சியைக் கண்டு பிரமித்தோம். திரியேக தேவனுக்கே மகிமை
செலுத்துகிறோம். எங்களை அழைத்து தரிசனம் தந்து பீல் மக்கள்
மத்தியில் கொண்டு வந்த ஆண்டவர் 18 வருடங்கள் அற்புதமாய் நடத்தி
வந்தார். “உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற
சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை
அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்’. (ஏசாயா 52
: 1)- இந்த வசனத்தின்படி கர்த்தர் எங்களை பீல் மக்களுக்கு
ஆசீர்வாதமாக வைத்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
TOP ^
|