English Version
பீல் ஆதிவாசி
மக்களின் கலாச்சாரம்
அமைவிடம், மக்கள் தொகை:
நமது பாரத தேசத்தில் சுமார் 580 வகையான 10 கோடி ஆதிவாசிகள்
வாழ்ந்து வருகிறார்கள். இதில் 3-வது அதிகமாய் உள்ளவர்கள் இந்த
பீல் ஆதிவாசிகள். இவர்கள் அதிகமாக குஜராத், இராஜஸ்தான்,
மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளனர். பரவலாக
சுமார் 1 கோடி பீல் மக்கள் இருக்கிறார்கள்.
வில்
அம்பு
:
“பீல்” என்ற
வார்த்தை திராவிட மொழியிலிருந்து மருவிய சொல் எனவும் “வில்“
என்னும் பொருள் கொண்டது. ஒவ்வொரு பீல் குடும்பத்தினரும் வில்,
அம்பு. வாள் இவைகளை வேட்டையாட அல்ல. திருடவும், கொள்ளையிடவும்,
சண்டையிடவும் தங்களை பாதுகாக்கவும் வைத்திருக்கிறார்கள். வெயில்
காலங்களில் வயல்வேலை இல்லாததால் வில் அம்புகளை எடுத்துக்கொண்டு
குழுவாகச் சென்று கொள்ளையடிப்பார்கள்.
உணவு
மற்றும் குடிநீர்:
பீல் ஆதிவாசி
சிறு கிராமங்களிலும் மலைப்பாங்கான குன்றுகளிலும், சிறிய குடிசைகள்
அமைத்து அதைச் சுற்றிலும் உள்ள தங்கள் நிலத்தில் மக்காசோளத்தைப்
பயிரிடுகின்றனர். இவர்கள் மக்காசோள ரொட்டியை, எண்ணெய், உப்பு
இல்லாமல் சுட்டு, காரமான இஞ்சி,மிளகாய், புண்டுகளைச் சேர்த்து
உண்பார்கள். இந்த பகுதியில் உள்ள மௌவா புவைக் கொண்டு பெரும்பாலும்
பெண்கள் தங்கள் வீடுகளிலும் ஆண்கள் நதியோரங்களிலும் சாராயத்தைத்
தயாரித்து சிறியர்கள், டிபண்கள் முதலாக அனைவரும் பருகுவார்கள்.
குடி தண்ணீர்
வசதி மிகவும் குறைவு. மழை இல்லாத காலங்களில் ஆற்றோரங்களில் பள்ளம்
தோண்டி ஆடு, மாடுகள் இறங்கிக் குடிக்கிற தண்ணீரைத்தான்
குடிப்பார்கள். இதனால் சரீரத்தில் அதிக வியாதிப்படுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தண்ணீரில் “வாலோ” என்று சொல்லக்கூடிய புழு
உண்டு. இது நம் வயிற்றுக்குள் சென்றுவிட்டால் கால்களில் கட்டி
ஏற்பட்டு அதிக வேதனை ஏற்படும். மேலும் பலவித தொற்று வியாதிகளும்
ஏற்படுகிறது.
உடையும், ஆபரணமும்:
மிகவும்
உள்ளடங்கிய கிராமத்திற்குச் செல்வோமானால் மக்கள் அரை
நிர்வாணமாகத்தான் இருப்பார்கள். கொஞ்சம் முன்னேறின கிராமங்களில்
உள்ள மக்கள் யாவரும் ஷால் ஒன்றைக் கட்டியிருப்பார்கள். ஆண்கள்
தங்கள் தலையில் 5 மீட்டர் நீளமுள்ள தலைப்பாகைக் கட்டுவார்கள்.
சிறு பிள்ளைகள் பெரும்பாலும் ஆடை அணியமாட்டார்கள். வெள்ளி நகை
மீது அதிக விருப்பமுள்ளவர்கள். ஆண்களும் அதிகமாக வெள்ளி நகைகளை
உபயோகிக்கிறார்கள்.
மொழி:
குஜராத்தில்
உள்ள ஆதிவாசிகள் பிலோடி பாஷையையும், இராஜஸ்தானில் உள்ளவர்கள்
வாகுடி, பீல் என்ற பாஷையையும், மத்தியபிரதேசத்தில் உள்ளவர்கள் பீலி
என்ற பாஷையையும் பேசுகிறார்கள். இந்த பாஷைகள் அனைத்தும் எழுத்து
வடிவில்லா மொழியாகும். நமது சுதேச ஊழியர்கள் கொஞ்சம்
படித்தவர்களாய் இருப்பதால் குஜராத்தி, ஹிந்தி மொழிகளை நன்று
பேசுவார்கள். ஆகையால் இவர்கள் குஜராத்தி, ஹிந்தி வேதாகமங்களைப்
படித்து மக்களுக்குப் புரியும்படியாக தங்கள் பாஷைகளில் செய்தி
கொடுப்பார்கள். மட்டுமல்லாமல் தங்கள் பாஷைகளில் செய்தி
கொடுப்பார்கள். மட்டுமல்லாமல் தங்கள் ஆதிவாசி பாஷையில் இயேசுக்
கிறிஸ்துவின் அற்புதங்கள், உபதேசங்கள், உவமைகள், பத்துக்கட்டளைகள்
எல்லாவற்றையும் பாடல்களாக மாற்றி ஆதிவாசி ராகத்தில் பாடுவார்கள்.
பாடல் மூலம் சீக்கிரம் இவர்கள் வேதத்தை அறிந்துகொள்கிறார்கள்.
திருமணம்:
பீல் மக்கள்
கலாச்சாரத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு குறைந்தது ஒரு கிலோ
வெள்ளி நகையும், குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் பணமும் வரதட்சணையாக
கொடுக்க வேண்டும். இதின் நிமித்தமாக வட்டிக்குப் பணத்தை வாங்கி
திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த நாட்கள்
முதற்கொண்டே வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். சிறிய வயதிலேயே
திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். சாந்த்லா விதி என்ற
நிகழ்ச்சியின் மூலமாக உற்றார், உறவினர்கள் பண உதவிகளை
அளிப்பார்கள். இந்த உதவிகளை அளிப்பவர்களின் வீட்டில் திருமணம்
வரும்போது இவர்கள் அவர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். திருமணமான
பின்பு குடும்ப வாழ்வில் பிரச்சனையென்றால் பிரிந்து விடுவார்கள்.
ஆனால் பெண்வீட்டார் வாங்கிய நகை மற்றும் பணத்தை சற்று அதிகமாக
தண்டனைத் தொகையுடன் திருப்பித் தரவேண்டும். பின்பு கணவனும்,
மனைவியும் வேறு திருமணம் செய்து கொள்வார்கள்.
சமூக பொருளாதார நிலைமை
பீல்
ஆதிவாசிகள் மழையை நம்பி வாழ்பவர்கள். மழையில்லையென்றால் விவசாயம்
கிடையாது. கூலி வேலை செய்ய நகர்புறங்களுக்குச் சென்றால் அதிலும்
சரியான கூலி கிடைக்காமல் ஏமாற்றப்படுவார்கள். இவர்கள் வட்டிக்குப்
பணம் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் வட்டிகட்டுவார்கள். ராம்சிங்
என்ற பீல் ஆதிவாசி கீழ்கண்டவாறு கூறினார். ரூ.2000 கடன்
வாங்கினேன். இதுவரை ரூ.14,000 வரை வட்டி கட்டியிருக்கிறேன்.
இன்னும் என் கடன் தீரவில்லை என்றார். என்ன பரிதாபம்! சிலர் வட்டி
கட்டமுடியாமல் தங்கள் வயல் நிலங்களை இழந்து விடுவார்கள்.
கல்வி:
பீல் ஆதிவாசி
மக்களில் படித்தவர்கள் மிகக் குறைந்த அளவே இருக்கிறார்கள். மிக
அதிகமான சிறுவர்கள் ஆடு, மாடு மேய்ப்பதற்கும் தங்களுக்குப் பின்
பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கும் கூலி வேலை செய்யும்
பெற்றோருக்கு உதவவும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகவே
பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் சிறுவர்கள் மிகக் குறைவாகவே
காணப்படுகிறார்கள். நடுநிலைப்பள்ளிக்கோ அல்லது உயர்நிலைப்
பள்ளிக்கோ செல்லவேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல
வேண்டும். அங்கும் பெரும்பாலான பள்ளிகளில் முறையான கல்வி
கற்றுக்கொடுப்போர் கிடையாது. ஆகவே கல்வித் தரம் மிகவும் கீழான
நிலையிலேயே காணப்படுகிறது.
மருத்துவம்:
நூற்றுக்கணக்கான
கிராமங்களில் மருத்துவ வசதிகளோ, ஆரம்ப சுகாதார வசதிகளோ கிடையாது.
நகர்புறங்களில் பல கிலோ மீட்டர்(30
–
40 கி.மீ) தூரம் நடந்தோ அல்லது கிடைக்கும் வாகனங்களைப் பிடித்தோ
மருத்துவமனைக்கு வரவேண்டும். அப்படி வந்தாலும் சிகிச்சை மற்றும்
மருந்துகளுக்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டும். சிலர்
தங்கள் உடமைகளை அடகு வைத்து அதிக வட்டிக்கு பணம் வாங்கி செலவு
செய்வார்கள். சிலர் செலவு செய்ய முடியாமல் நோயின் வேதனையில்
மரித்துவிடுவார்கள். ஆனால் ஆயிரமாயிரம் ஜனங்கள் ஏழ்மையின் காரணமாக
மந்திரவாதிகளிடம் சென்று ஆடு, கோழிகளை வெட்டியும் சாராயம்
காய்த்துக் கொடுத்தும், சுகம் கிடைக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.
போக்குவரத்து:
பெரும்பாலான ஆதிவாசி கிராங்களுக்கு மின்சார வசதி கிடையாது.
அரசாங்கம் மின்சார வசதி செய்து கொடுக்க முன்வந்தாலும்
பெற்றுக்கொள்ள மனமில்லாமல் இருப்பார்கள். அந்த அளவிற்கு
முன்னேற்றத்திற்கு முக்கியத்துவமில்லாதவர்கள். நம்முடைய ஊழியம்
நடைபெறுகின்ற சுமார் 600-க்கும் அதிகமான கிராமங்களில் சுமார்
500-க்கும் அதிகமான கிராமங்களில் மின்சார வசதி கிடையாது.
ஆவி
வணக்க வழிபாடு
ஆதிவாசிகள்
இறந்தவர்களின் ஆவிகளை வணங்குபவர்கள். மந்திரவாதிகளை தெய்வமாய்
மதிப்பார்கள். மந்திரவாதி கூறுகிறபடி ஆடு, கோழி இவைகளை
பலியிடுகிறார்கள். இவ்வாறு செய்கிறபடியால் வீட்டிற்கு வீடு
பிசாசு உண்டு. மற்றும் பில்லிசூனியம் ஒருவருக்கொருவர் வைக்க இந்த
மக்களுக்கு நன்கு தெரியும். பொதுவாக வாலிபப் பெண்களுக்கு
பில்லிசூனியம் எப்படி வைக்கவேண்டும் என்று பெரிய பெண்கள் கற்றுக்
கொடுப்பார்கள். ஆகையால் ஆதிவாசிகளின் குடும்பங்கள் எல்லாமே
பில்லிசூனியக் கட்டுகளால் பாதிக்கப்பட்டு விடுதலை பெற வழியில்லாமல்
துக்கத்தில் அழிந்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலைகளில்
வாழும் இந்த பீல் மக்கள் தங்களைக் குறித்து கரிசனையுள்ளவர்கள்
இவ்வுலகில் யார் என்று ஏங்குபவர்கள்?
|