English Version
“நான்
அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை”.
அப்
28 :
19
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, தேவ
கிருபையால் 01.07.91 அன்று தேவன் தந்த பீல் மக்கள் தரிசனத்துடன்
அன்று அற்பமாக ஆரம்பிக்கப்பட்ட ஷாலோம் ஊழியங்களை பரிசுத்த
ஆவியானவர் கடந்த 19 வருடங்களில் 520 கிராமங்களில் சபைகளை
ஸ்தாபிக்கவும், 435 பீல் ஆதிவாசி சுதேச ஊழியர்களை எழுப்பவும்
கிருபை தந்தார். அதிகமான ஜெபத்துடன் பரிசுத்த ஆவியானவருடைய
வழிநடத்துதலின்படி நமது சபை பணிகளை Shalom Diocese in India என்ற
திருமண்டல அமைப்பை உருவாக்க சபைகளை ஒருங்கிணைத்துள்ளோம். அடியேனை
பேராயராகவும், தெரிந்தெடுக்கப்பட்ட 77 சுதேச ஊழியர்களை
போதகர்களாகவும் பிரதிஷ்டை செய்து வைக்க தேவன் கிருபை தந்தார்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
அநேக திருச்சபை தலைவர்கள், சுவிசேஷகர்கள்,
மேய்ப்பர்கள், விசுவாசிகள் வாழ்த்துக்களை அனுப்பி
உற்சாகப்படுத்தினார்கள். அவர்களுக்கு தேவ நாமத்தில் நன்றி
கூறுகிறேன். ஆனால் சிலர் ஏன் இந்த திருமண்டல அமைப்பு? என்றும்
மிஷனெரியாக இருந்த நீங்கள் பேராயராக ஏன் மாறிவிட்டீர்கள்? என்றும்
கேட்டார்கள். ஆகவே இந்த சிறிய தொடர் மூலம் சில கருத்துக்களை நான்
தெரிவிக்க விரும்புகிறேன்.
முதலாவது இது வேதாகமத்தில் உள்ள வழி
நடத்துதல் அப்போஸ்தல நடபடிகளை வாசியுங்கள். பரிசுத்த பவுல்
புறஜாதி மக்களுக்கு சுவிசேஷம் கூறி அழைக்கப்பட்டார்.
சுவிசேஷத்தைக் கூறி பாவம், சாபம், நோய்களிலிருந்து விடுதலை
பெற்றார்கள். அதன்பின்பு சபை கூடுதலை ஆங்காங்கே எழுப்புகிறார்.
எழுதப்பட்ட நிருபங்களையும், அப்போஸ்தல நடபடிகளையும் வாசிக்கும்போது
காண்கிறோம். அதன் பின்பாக அப்போஸ்தலர்கள் குறிப்பாக பவுல் ஒவ்வொரு
சபைகளிலும் மூப்பர்களை ஏற்படுத்துவதையும் வாசிக்கிறோம். மேலும்
சபையில் 5 வகையான ஊழியங்கள் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,
சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை தேவன் எழுப்புவதை
காண்கிறோம். சபைகளுக்கான பொறுப்புகள், மேய்ப்பனின் பொறுப்புகள்,
விசுவாசிகளின் வாழ்வு அனைத்தையும் நிருபங்களில் வாசிக்கிறோம்.
அதன்பின்பு கண்காணிகளையும் பவுல் உருவாக்கி பொறுப்புகளை
தருகிறார். சுவிசேஷம் அறிவிக்க நாம் மிஷனெரிமார்களை, சுதேச
ஊழியர்களை தாங்குவதின் நோக்கம் சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நம்முடைய தமிழ்நாட்டில் நானூறு ஆண்டுகளாக மிஷனெரி ஸ்தாபனங்கள்
மிஷனெரிகளை அனுப்பி சுவிசேஷம் அறிவித்து, சபைகளை ஸ்தாபித்த
திருமண்டலங்களை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அதுபோலவே ஷாலோம்
ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதித்து ஆத்துமாக்களையும், சபைகளையும் 19
வருடங்களில் பெருகச் செய்துள்ளார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
இரண்டாவதாக சபைகள் பெருகும்போது அவைகளை
ஒருங்கிணைத்து சபைக்கான ஆவிக்குரிய ஒழுங்குகள், தேசத்தின்
சட்டத்திட்டங்களை மதித்து, சபைமக்கள் மத்தியிலும் சாட்சியாக
விளங்கவேண்டும். அநேக முறை எதிர்ப்புகளால் நம் ஊழியங்கள்,
ஊழியர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கத்தார் இது எந்த சபை?
சபைக்கான ஒழுங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? போதகருக்கான
ஒழுங்குகள் உண்டா? நல்ல காரியங்களை செய்கிறீர்கள் நல்லதுதான் ஆனால்
பிரச்சாரம் பண்ணும் குழுவா? இல்லை சபைக்கான ஒழுங்குகளா? என
கேட்க்கப்படுகிறது. மேலும் சபை வளரும்போது அனைத்து Record,
Documents மற்றும் ஞானஸ்நானம், திருமணம், மரணம் இவைகள் எல்லாம்
ஒழுங்காக பதிவு செய்யப்பட வேண்டும். அப்படியால் மிஷனெரி பணிக்கான
இயக்கத்திலிருந்து சபைக்கான ஒழுங்கு காரியங்களை கொண்ட அமைப்பில்
இணைக்கப்பட வேண்டும்.
தேவன் நமக்குத் தந்த 520 சபைகளை 19 வருடங்கள்
நாம் பாடுபட்டு ஆவிக்குரிய பெற்றோராக நாங்கள் பராமரித்து வந்து தேவ
பணியை மற்ற Denomination (சபை பிரிவுகளில்) கொடுப்பதில் பல
காரியங்களில் சிரமமாக உள்ளது.
தேவன் ஷாலோம் ஊழியத்தின் மூலம் உருவாக்கின
அனைத்து சபைகளில் பணிபுரியும் போதகர்கள் ஊதியத்திற்காக
நியமிக்கப்படவில்லை. அவர்கள் ஊழியத்திற்காக எழுப்பப்பட்டு சபைகளை
அவர்களே உருவாக்குகின்றார்கள்.
அவர்களுக்கு நாம் ஊதியம் கொடுப்பதில்லை.
Theology (வேதபட்டம்) முடித்து வந்து போதகராக யாரையும் நியமித்து
ஊதியம் வழங்குவதில்லை. 77 குருத்துவ அபிஷேகம் பெற்ற போதகர்கள்
விசுவாசத்தினால் தேவன் தரும் காணிக்கையை வைத்து Self Support
ஊழியராகவும் அதே நேரம் Church Network Diocese-க்கு ரூ.50 சதவீதம்
காணிக்கைகளை கொடுத்தும் வருகிறார்கள்.
எல்லா ஊழியர்களும் தங்கள் சொந்த கிராமத்திலேயே
எழுப்பப்பட்டு, சொந்த கிராமத்தில் அவர்கள் நிலத்தை காணிக்கையாய்
தந்து அங்கு ஆலயம் கட்டி 7-10 மூப்பர்களை பயிற்றுவித்து 100
குடும்பங்களை தேவனண்டை நடத்திவருகிறார்கள். எனவே அவர்களுக்கு
Transfer கிடையாது. எதாவது பெரிய பிரச்சனைகள் வரும்போது 7-12
மூப்பர்கள் ஜெபித்து ஆலோசித்து தீர்மானங்களை ஆவியானவரின்
ஒத்தாசையுடன் எடுப்பார்கள்.
ஆகவே நாம் எந்த சபை பிரிவுகளுக்கும் நம்
சபைகளை கொடுத்துவிடவில்லை. ஆவியானவரின் நடத்துதலின்படி Shalom
Diocese in India என்ற திருமண்டல அமைப்பை உருவாக்கி மிஷனெரி பணி
மூலம் வரும் சபைகளை இணைத்து வருகிறோம்.
இந்திய கிறிஸ்தவ அமைப்பு ஒழுங்கின்படி மூன்று
திருமண்டல பேராயர்களால் புது திருமண்டலம் (Diocese) பிரதிஷ்டை
செய்யபடவும், புதிய பேராயர் மற்றும் போதகர்களும் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளார்கள். அந்த மகிமையான வைபவ ஆராதனைகளை நடத்தி
ஆசீர்வதிக்க Anglican Bishop-மார்கள் மற்றும் Arch-Bishop
Most.Rev.Dr. Duraisingh James, Most.Rev.Dr. John Sathiakumar,
Rt.Rev.Dr. John S.D. Raju முன்வந்தார்கள். தேவதிட்டத்தின்படி
20.11.09 அன்று Shalom Diocese மற்றும் Bishop Consecration
மற்றும் 77 போதகர்களுக்கும் பிரதிஷ்டை ஆராதனைகளும் தேவ மகிமை
விளங்கும்படியாய் நடைபெற்றது. மற்றபடி Anglican திருச்சபையிலோ
வேறு எந்த சபைப் பிரிவுகளிலோ நாம் இணைந்துவிடவில்லை.
Shalom Diocese-க்கான அனைத்து ஆவிக்குரிய
மற்றும் சபை ஒழுங்குகளுக்கான சட்டதிட்டங்களை மூத்த சபை தலைவர்கள்
மற்றும் Christian Institute Management (CIM) சேர்ந்த அன்பு சகோ.
ஜெயக்குமார் அவர்கள் பணித்தளத்திற்கு வந்து பார்வையிட்டு
பலநாட்களாக ஜெபித்துக் கூடி ஆலோசித்து Shalom Diocese-க்கான Church
Constitution உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் குழுவாக இணைந்து
திறம்பட செயல்படுத்த காரியங்களை ஜெபத்துடன் செய்து வருகிறோம்.
இந்த பிரதிஷ்டை வைபவங்களுக்கு பின்பு மூன்று
மாநிலங்களிலுள்ள ஷாலோம் சபை போதகர்களை மற்ற சபையார், கிராம
பஞ்சாயத்து தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள்
மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் மிக மதிப்புடன் நடத்தி
வருகிறார்கள். சபை ஒவ்வொரு கிராமங்களில் இயேசுவின் நாமத்தினால்
உயர்த்தப்படுகிறது. மட்டுமல்லாமல் சபை தேவனுடைய திட்டத்தை
நிறைவேற்ற அர்ப்பணித்துள்ளது. இவ்வருடம் அடுத்த 100 சபை ஊழியர்கள்
Church Network-ல் (Diocese)-ல் இணைய ஆயத்தமாகி வருகிறார்கள்.
அனைவரும் B.Th Degree Alahabad Bible Seminar மூலமாக
படித்துள்ளார்கள்.
SHARING LOVE MISSION – 7000 பீல்
ஆதிவாசி கிராமங்களில் மிஷனெரி பணிகளை தொடர்ந்து நடத்தி, 7000 சுதேச
ஊழியர்களை உருவாக்கி, சபைகளை கட்டி எழுப்பும்.
SHALOM DIOCESE IN INDIA – அமைப்பில்
கட்டப்பட்ட சபைகள் இணைக்கப்பட்டு அவை அனைத்தும் ஆவிக்குரிய
வளர்ச்சியிலும், சபை ஒழுங்குகளுடன் தன் பணிகளை நிறைவேற்றும்
கிறிஸ்து இயேசுவின் இரண்டாம் வருகைக்கு சபைகள் ஆயத்தமாக்கப்படும்.
SHALOM CHARITY MISSION- அமைப்பின்
மூலமாக ஆதிவாசி மாணவர்களின் கல்விப்பணி, மருத்துவம், குடிநீர் சமுக
மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கிறிஸ்துவுக்குள் மகிமையான
பீல் சமுதாயம் உருவாக்கப்படும்.
எனவே அன்பானவர்களே Diocese ஆனவுடன், பேராயர்,
போதகர்கள் பிரதிஷ்டை செய்தவுடன் தரிசனப்பணி நிறைவு பெறவில்லை. இது
ஆரம்பம். இது விதைக்கப்பட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் பீல்
ஆதிவாசி திருச்சபைகள் Shalom Diocese in India பாரத தேச
திருச்சபைக்கு சாட்சியாக, வெளிச்சமாக, ஆசீர்வாதமாக அமையும்
என்பதில் சந்தேகமில்லை.
ஷாலோம் சபைகள் ஆவியானவரின் அபிஷேகத்திற்குள்
நிரப்பப்பட்ட சபைகளாகவும் ஷாலோம் சபைகள் ஜெபித்து ஆத்தும ஆதாயம்
செய்யும் சபைகளாகவும் மேலும் ஷாலோம் சபைகள் தேவனுக்காக கொடுத்து
உதவும் சபைகளாகவும் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக்கப்பட்ட
சபைகளாவும் விளங்க தொடர்ந்து ஜெபித்துத் தாங்குங்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
Top^
|