ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
ஷாலோம் பிரதிநிதிகள் ^

English Version

ஷாலோம் ஊழிய பிரதிநிதிகள் தேவை

கிறிஸ்துவுக்குள் மிக அன்பானவர்களே, 17 வருடங்களை ஊழியப்பாதையில் கடந்துவர தேவன் கிருபை தந்துள்ளார்.  பீல் மக்கள் திரளாக இரட்சிக்கப்பட, பீல் சுதேச ஊழியர்களை தந்து, ஆலயங்கள் கட்டப்பட கிருபை செய்துள்ளார்.  இம்மாபெரும் மிஷனெரிப்பணியில் நாங்கள் மோசேயை போல் முன்னால் நின்று ஊழியங்களை நடத்தி சென்றாலும் எங்களுடன் பணிபுரிய அநேக யோசுவாக்களை பீல் சுதேச ஊழியர்களை தேசத்தை சுதந்தரிக்க தேவன் எழுப்பியுள்ளார். அதுபோல ஜெபித்து, தாங்குகிற நீங்கள் தான் மிக முக்கியமானவர்கள்.  ஆரோன், ஊரைப்போல நீங்கள் தாங்குவதின் நிமித்தமாக யேகோவா நிசி தேவன் மூலமாக வெற்றியை சுதந்தரிக்கிறோம்.

மேலும் ஆரோன், ஊரைப்போல் தாங்குகிற நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள்.  இப்பணியில் இன்னும் 36 மாதங்களில் 1000 ஊழியர்களை  1000 சபைகளை ஸ்தாபிக்க மேலும் உங்கள் உதவியை நாடுகிறோம்.  உங்களில் பல மிஷனெரி பணி செய்ய வேண்டும் என்கிற வாஞ்சை கொண்டவர்கள் என விசுவாசிக்கிறேன்.  நீங்கள் மிஷனெரியாக செல்லமுடியவில்லை ஆனாலும் ஆத்தும பாரத்துடன் ஜெபித்து தாங்கி வருகிறீர்கள்.  அதற்காக தேவனை துதிக்கிறேன்.  நீங்கள் இன்னும் மிக நெருக்கமாக, சற்று அதிகமாக மிஷனெரி பணியில் ஈடுபட, பீல் மக்கள் திரளாய் இரட்சிக்கப்பட உங்களை ஈடுபடுத்த இன்னும் சில வாய்ப்புகளை தருகிறோம்.

ஷாலோம் மிஷனெரி பணிக்கென நீங்கள் பிரதிநிதியாக உங்கள் பகுதியில் செயல்பட உங்களை அன்புடன் அழைக்கிறேன்.  நம் மிஷனெரி பணியை ஜெபித்து தாங்குவோர் உங்கள் பகுதியில் சில தேவபிள்ளைகள் இருக்கிறார்கள்.  அவர்களை நீங்கள் சந்தித்து மாதந்தோறும் அவர்கள் தரும் காணிக்கையை ஜெபித்து வாங்கி சேர்த்து அனுப்பி வைக்கலாம்.  ஏற்கனவே உள்ள ஷாலோம் ஆதரவாளர் சொற்பமாக இருந்தாலும், இல்லையெனில் யாருமே இல்லாவிட்டாலும் நம் பணிகளை உங்களை சுற்றியுள்ள தேவ ஜனங்களுக்கு பத்திரிக்கை, பிரதிகள், VCD  மூலமாக அறிமுகம் செய்து பங்காளர்களாக இணைய   வைத்து ஜெபித்து தாங்க முன் வரலாம்.  குறைந்தது ஐந்து பேர்களையோ, பத்து பேர்களையோ அறிமுகம் செய்து காணிக்கைகளை மாதம் மாதம் சேர்த்து அனுப்பலாம்.  இதுவரை நம் ஊழியத்திற்கு 38 பிரதிநிதிகள் காணிக்கை சேர்த்து அனுப்பி வருகிறார்கள்.

பிரதிநிதிகளாக செயல்பட முன்வருவோர் எங்களை தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும், அப்படி முன்வரும் பிரதிநிதிகளுக்கு விளக்கங்களைக் கூறி ஷாலோம் பத்திரிக்கைகள் மற்றும்  Phamlet, CD,VCD- இவைகளுடன் நீங்கள் காணிக்கை சேகரிக்க Receipt Book (3 Copies உடன்) அனுப்பிவைப்போம்.  அந்த பகுதியில் உள்ள ஷாலோம் ஆதரவாளர்களுக்கு ஷாலோம் மாத பத்திரிக்கையில் உங்களை அறிமுகம் செய்து வைப்போம்.  நீங்கள் சேகரிக்கும் காணிக்கைகளை மாதந்தோறும் Cheque, DD மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாகவோ செலுத்தலாம்.  2-ம் இரசீது பிரதிகளை ஷாலோம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது நீங்கள் பீல் மக்கள் இரட்சிப்பின் பணிக்காக செய்யும் மிகப்பெரிய உதவிமட்டுமல்ல மிஷனெரி பணியில் முக்கியப் பங்கு பெறுகின்றீர்கள்.  நீங்கள் சிறிதாக அறிமுகப்படுத்துவதன் மூலம் மிஷனெரி ஆதரவாளர்கள், சிறப்பு நன்கொடையாளர்கள், ஆலயக்கட்டுமான பணி ஆதரவாளர்கள் ஆகியோரை தேவன் உங்களுக்கு கட்டாயம் தருவார்.  “தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்.” (மத் 10 : 41)  என்ற அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வாக்கின்படி மிஷனெரி பணியை ஏற்று பிரதிநிதியாக பணிபுரிய முன்வரும் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

நம் தேசம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால் தேவபிள்ளைகள் அனைவரும் ஆளுக்கொரு கை ஆண்டவருக்காக வை” என்ற சொல்லின்படி செயல்படுவோம். முன்வாருங்கள். விபரங்களுக்கு ஷாலோம் தலைமை அலுவலகத்திலுள்ள சகோ. சாம் குணசீலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். (செல். 093456-75468)

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!                                                                                   

 

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு