English Version
இரண்டு நூற்றாண்டுகளாக நமக்கு மேலைநாட்டு
நற்செய்திப் பணியாளர்கள் சுவிசேஷத்தை அறிவித்தது மட்டுமின்றி,
நமக்கு கல்வி அறிவைப் புகட்ட அரும்பாடுபட்டார்கள். கல்கத்தாவில்
வில்லியம் கேரி, நாசரேத்தில் மர்காஷியஸ் அவர்கள், தூத்துக்குடியில்
கால்டுவெல் அவர்கள், சாயர்புரத்தில் போப் அவர்கள் இந்தியாவின்
ஒவ்வொரு மாவட்டங்களிலும், கிராமங்களிலும் கல்வியறிவைத் தரும்படியாக
தங்களையே இந்திய தேசத்துடனும், பாஷையுடனும் பிணைத்துக் கொண்டவர்கள்
ஏராளம் ஏராளம்! மட்டுமின்றி சிறந்த கல்வி ஸ்தாபனங்கள் கல்லூரிகள்
எழுப்பப்ட நற்செய்தி பணியாளர்களை ஆதரித்து தாங்கிய மேல்நாட்டு
சபையினர், விசுவாசிகள் எத்தனை ஆயிரம் பேர்!
தேவ கிருபையினால் சுமார் 80 இலட்சத்திற்கும்
அதிகமான பீல் ஆதிவாசிகள் மத்தியில் குஜராத், இராஜஸ்தான்,
மத்தியபிரதேசம் மாநிலங்களில் கடந்த 16 வருடங்களில் சுமார் 600
கிராமங்களில் சுவிசேஷம் அறிவித்து சபைகளை ஸ்தாபிக்க தேவன் கிருபை
செய்துள்ளார். அந்தகாரத்திலும், குடிப்பழகத்திலும் பாவபிடியிலும்
வாழ்ந்துகொண்டிருந்த சுமார் 20,000 குடும்பங்கள் இயேசு
கிறிஸ்துவில் புதுவாழ்வு பெற்றுள்ளார்கள். தேவனுக்கே
மகிமையுண்டாவதாக.
இன்றோ அத்தனை நன்மைகளைப் பெற்றுக்கொண்ட
இந்திய விசுவாசிகளாகிய நாம் நமது பணித்தளங்களில் இயேசுவை அறிந்து
ஏற்றுக்கொண்டு வரும் ஆயிரம் ஆயிரம் பீல் ஆதிவாசி சிறுவர்களுக்கு
ஏதாகிலும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
|
|
|
பீல் ஆதிவாசிகள் தங்கள் குடும்பத்திலுள்ள
பிள்ளைகளை படிக்க அனுப்புவதற்கு பதிலாக மழை பெய்யாமலும், உணவிற்காக
கஷ்டப்படும் காலங்களிலும் பட்டணங்களுக்கு முழு குடும்பமாக கூலி
வேலைக்கு சென்றுவிடுவார்கள். மேலும் தங்கள் சிறு பிள்ளைகளை
கவனிக்க பெரியபிள்ளைகளை வைத்துக்கொள்வார்கள். ஆடு, மாடுகளை
மேய்த்துவரவும், வயல்வெளிகளில் வேலைகளை கவனிக்கவும்தான் சிறுவர்களை
பயன்படுத்துவார்கள். பெரும்பாலானோர் பிள்ளைகளுக்கு சரியான உணவு,
உடை மற்றும் கல்வி அறிவு வளரவும் தேவைகளை சந்திக்க முடியாமல்
வறுமையில் வாழ்கிறார்கள். அநேக கிராமங்களில் மின்சார வசதிகள்
இல்லாதபடியால் இரவு நேரங்களில் படிக்க வசதி கிடையாது. சாராயம்
குடிப்பவர்கள், சண்டை போடுகிறவர்களால் கிராமத்தில் அமைதியான
சூழ்நிலை கிடையாது. பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கவோ,
உற்சாகப்படுத்தவோ யாரும் கிடையாது. யார் வீடுகளிலாவது 10-ம்
வகுப்பிற்கு மேல் படித்துவிட்டால் உடனே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள்
செய்வினை வைத்துவிடுவார்கள். நடுநிலை பள்ளிகள் மற்றும்
உயர்நிலைப்பள்ளிகள் செல்ல பல கி.மீ தூரம் செல்ல வேண்டும். வாகன
வசதிகளும் கிடையாது. திருடர் பயம், வாகன வசதிகள் இல்லாத காரணமாக
கிராம பள்ளிகளுக்கு வாத்தியார்கள் வருவது, கற்றுக்கொடுப்பது இவைகள்
எல்லாமே மிகவும் கடினமாகும். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு வரை
படித்து தேர்ச்சி பெற்றவர்கள் கிராமங்களில் கைவிரல் கொண்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள்.
ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட திரளான ஆதிவாசி
குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளில் சிலரையாவது படித்து
முன்னேற்றுவிக்க வாஞ்சையுடன் இருக்கிறார்கள். எனவே நாம்
எப்படியாவது 10,000 பிள்ளைகளுக்கு கல்வியறிவை வழங்க வேண்டும்.
இவர்கள் படித்து ஆதிவாசி மக்களுக்கான இட ஒதுக்கீடுகளைப்
பயன்படுத்தி கல்வி, மருத்துவம் மற்றும் பல துறைகளிலும் கிராம
பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் வளர்ச்சி துறைகளில் ஈடுபட்டு தங்கள்
சொந்த சமுதாயத்திற்கு ஆசீர்வாதமாக மாறவேண்டும் என்பதுதான்
எங்களுடைய பாரமாகும். அத்றகாகத்தான் மூன்று மாநிலங்களிலும்
குறைந்தது 10 விடுதிகளையும், 3 பள்ளிக்கூடங்களையும் 2010-க்குள்
அமைக்க வேண்டும். தேவன் அதற்கேற்ற வாசல்களைத் திறந்து தரவும்
தியாகத்துடன் இத்திட்டங்களை நிறைவேற்றவும், ஆதரவாளர்களை தேவன்
எழுப்பவும் ஜெபியுங்கள்.
ஷாலோம் திக்கற்ற பிள்ளைகளுக்கான விடுதி
இராஜஸ்தானில் கோய்க்கா கிராமத்தில் சகோ. பாதர்
பாரியா கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டு வல்லமையாக
பயன்படுத்தப்பட்டு வரும் சுதேச ஊழியர். கடந்த 2005-ம் ஆண்டு முதல்
தேவன் தந்த பாரத்தின்படி அங்குள்ள தாய், தகப்பன் இல்லாத திக்கற்ற
பிள்ளைகள் 30 பேருக்கு ஒரு விடுதியை பாதர்பாரியா தலைமையில்
உருவாக்கப்பட்டது. விடுதியில் தங்கி பயின்று தேவனுடைய பிள்ளைகளாய்
உருவாகி வருகிறார்கள். குளித்துரை A.G. சபை போதகர். ஆமோஸ் அவர்கள்
மூலமாக இந்த பிள்ளைகளுக்காக ரூ.70,000/- செலவில் விடுதி அறை
கட்டப்பட்டுள்ளது. திக்கற்றவர்களை விசாரிக்கிற கர்த்தர் இப்பணிகளை
ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
ஷாலோம் மாணவர் விடுதி அந்தர்வேலியா
மத்தியபிரதேசம் மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில்
அந்தர்வேலியா கிராமத்தை மையமாக வைத்து சுமார் 50 கிராமங்களில்
சபைகள் உருவாக்கப்பட்டது. இங்கு 30 ஆதிவாசி பிள்ளைகள் இந்த
கிராமத்தில் உள்ள நம் ஷாலோம் விடுதியில் உணவு, உடை, இருப்பிடம்
வசதிகளுடன் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று கல்வி கற்று
வருகிறார்கள். இங்கு தேவகிருபையால் நமக்கு 3 ஏக்கர் நிலம் உண்டு.
அந்த நிலத்தில் கோட்டை சுவர் எழுப்ப சுமார் 100 மாணவர்களுக்கு
விடுதி அமைக்க, கர்த்தருக்கு சித்தமானால் ஆரம்பப்பள்ளி 1-5 வரை
ஆரம்பிக்க ஜெபித்து திட்டமிடுகிறோம். நிறைவேற்றப்பட ஜெபியுங்கள்.
இதைப்போல 2010-ம் ஆண்டிற்குள் மத்தியபிரதேசத்தில் குறைந்தது 3
இடங்களில் மாணவர் விடுதிகள் ஆரம்பிக்கப்பட அவசியம் உள்ளது.
சகோதரி. மீரா புர்சன் மற்றும் (Warden) அவர்களுக்காக ஜெபியுங்கள்.
ஷாலோம் மாணவர் விடுதி ஜெசவாடா, குஜராத்
தேவ கிருபையால் கடந்த 2004-ம் ஆண்டு முதல்
குஜராத்தில் ஜெசவாடா கிராமத்தில் சிறிய வாடகை வீட்டில் 30 ஆதிவாசி
பிள்ளைகள் தங்கி அருகிலுள்ள அரசு பள்ளியில் சென்று பயின்று
வருகிறார்கள். 3 வருடங்களாக நம் 30 பிள்ளைகளும் முதல் தரமாக அதிக
மதிப்பெண்கள் எடுத்து கல்வி பயின்று வருகிறார்கள். சகோ. பாவ்சிங்
கட்டாரா மற்றும் அவர் மனைவி விலாஸ்பேன் பொறுப்பாக நடத்தி
வருகிறார்கள். இங்கு 100 பேர்கள் படிக்க வசதிகளுள்ள பள்ளிக்கூட
வசதி உண்டு. நமக்கு கிடைக்கப்பட்ட நிலத்தில் Hostel கட்டிடங்கள்
100 மாணவர் தங்கும் வசதியுடன் கட்டப்பட வேண்டும். ஜெபிக்க
வேண்டுகிறேன்.
ஷாலோம் ஆரம்ப பள்ளி மற்றும் மாணவர் விடுதி
பிஜல்பூர், இராஜஸ்தான்
தேவ கிருபையால் 1995-ம் ஆண்டு நம் ஊழியத்தில்
இராஜஸ்தானில் தாட்கா கிராம்த்தில் நாத்துபாய் டின்டோடு குடும்பமாக
இரட்சிக்கப்பட்டார். நோய், பிசாசின் சாபங்களிலிருந்து விடுதலை
பெற்ற அவர் சுதேச ஊழியராக ஒப்புக்கொடுத்தார். அநேகரை சொந்த
கிராமத்தில் ஆண்டவருக்குள் வழிநடத்தி ஆலயமும் கட்ட தேவன் கிருபை
தந்தார். அவர் B.Ed., படித்து முடித்து தேர்ச்சியும் பெற்றார்.
அவருக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு வந்தபோதும் சொந்த
ஜனங்களுக்கு கல்வியறிவு தருவதற்கு மிஷனெரி பணி மூலமாகதான் மிக
நன்றாக செய்யமுடியும் என்று எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சபைக்கு ஸ்தல ஊழியரை எழுப்பிவிட்டுதான் கல்வி பணியை ஆரம்பிக்க
தேவன் கிருபை தந்தார். 2001-ம் ஆண்டு ஜுலை மாதம் ஷாலோம் பள்ளி
இராஜஸ்தானில் 1-ம் வகுப்பு 40 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று பிஜல்பூர் கிராமத்தில் 1-5 வரை நடைபெற்று வருகிறது.
மாவட்டத்திலும், தாலுகா அளவிலும் எல்லா துறைகளிலும் முதன்மையாக
விளங்கிவருகிறது.
|
|
|
மேலும் மாணவர்கள் தங்கி பயில வசதியாக ஹாஸ்டல்
வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 300 பிள்ளைகள்
ஹாஸ்டலில் தங்கி, 1-5 வகுப்பு வரை நம் ஷாலோம் பள்ளியிலும், 6-8
வகுப்பு வரை அருகில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்றும் கல்விகற்று
வருகிறார்கள். சகோ. நாத்துபாய் டின்டோடு அவர் மனைவி கிரேஸி
டின்டோடு தரிசனத்துடன் சொந்த பீல் ஜனங்களுக்கு கல்வி வழங்கும்
பெற்றோராக விளங்கி வருகிறார்கள். இது நம் ஊழியத்தின் மூலமாக
ஆரம்பிக்கப்பட்ட முதல் பள்ளியும், விடுதியுமாகும். இங்கு
பெரும்பாலான பிள்ளைகள் நம் சுதேச ஊழியர்கள் மற்றும் பள்ளியில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். இராஜஸ்தானில்
சத்தரக்கூட்டா என்னுமிடத்தில் நமக்கு ஐந்து ஏக்கர் நிலம்
வாங்கப்பட்டுள்ளது. வசதி குறைவுகளுடன் நிறைவாக நடைபெறும் இந்த
கல்வி பணிக்காக பள்ளிக்கூட கட்டிடங்கள், ஹாஸ்டல் கட்டிடங்கள்
பணியாளர்களுக்கு வீடுகள் பிள்ளைகளுக்கான Cots, furine அடிப்படை
தேவைகள் சந்திக்கப்பட பல லட்சங்கள் தேவைப்படுகிறது. தேவன் தாமே
நல்லாதரவாளர்களை எழுப்ப ஜெபியுங்கள். மேலும் வருங்காலத்தில் இலட்ச
இலட்சமாக ஆண்டவரண்டை வரும் விசுவாசி குடும்பங்களின் பிள்ளைகளுக்கு
உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி கூடங்கள்
உருவாக பாரத்துடன் வேண்டிக்கொள்ளுங்கள்.
I.P. Mission மாணவர் விடுதி, ஜாலோத்,
குஜராத்.
தேவ கிருபையால் ஜாலோத் நகரில் அமைந்துள்ள I.P.
Mission மற்றும் ஹாஸ்டல் நம் சுதேச ஊழியர் மற்றும் விசுவாசிகளின்
பிள்ளைகள் 70 பேர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல்
கோத்ரா, பரோடாவில் உள்ள மெத்தடிஸ்ட் பள்ளி மற்றும் விடுதிகளில் 5
மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். அதேபோல் சிறிய ஊர்களில்
அருகாமையில் உள்ள பள்ளிகள் மற்றும் R.C. Mission ஹாஸ்டல் இவைகளில்
தங்கி பயிலும் நம் சுதேச ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும்
தெரிந்தெடுக்கப்பட்ட மூப்பர்கள், விசுவாசிகளின் பிள்ளகைள் சுமார்
200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் நம் ஊழியத்தின்
மூலமாக அவர்களின் பள்ளி, விடுதி கட்டணங்களை செலுத்தி மற்றும் பிற
கல்விக்கான உதவிகளையும் செய்து பராமரித்து வருகிறோம். சராசரியாக
ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.400/- செலவாகிறது. அதுமட்டுமின்றி
மேலும் 100 ஊழியர்களின் பிள்ளைகள் தங்கள் கிராம பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000/- வீதம் உதவித் தொகை
வழங்கப்படுகிறது.
Back to குழந்தைகள் ஊழியம்
Top^
|