ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
தேவ செய்திகள் ^

English Version

“உனக்கு முன்பாக போகிற கர்த்தர்”

 

 

Back to Message Home

“கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்;  அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (உபாக 31 : 8)

வேதத்தில் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை தேவ தாசனாகிய மோசே யோசுவாவினிடத்தில் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகள். 40 வருட ஊழியப்பாதையில் தலைவனோடு தோள் கொடுத்து யோசுவா நடந்து வந்தான்.  அடுத்து வருகிற பெரிய  உத்தரவாதமான பொறுப்பை ஏற்கவேண்டிய காலத்தில் எப்படியிருக்குமோ என கலங்கின வேளையில் இந்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டது.  நம் வாழ்க்கை பாதையிலும் நாம் கடந்து செல்லவேண்டிய பாதையிலும் நமக்கும் இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை தேவன் தருகிறார்.   முதலாவது மோசே ஜனங்களை பார்த்து உபா.31 : 3-ல் சொல்கிறார் “உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாக கடந்து போவார்”.  இரண்டாவதாக மோசே யோசுவாவிடம் கூறும்போது உபா 31:8-ல் “கர்த்தர்தாமே உனக்கு முன்பாக போகிறவர்” என்று வாக்கு தருகிறார்.  இந்த வாக்குத்தத்த வார்த்தையில் 3 காரியங்களை தேவன் நமக்கு தருகிறார்.

 

கர்த்தர்தாமே உனக்கு முன்பாக போகிறவர்:-

தேவ ஜனங்களை பார்த்து தேவன் சொல்கிறார்.  நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். (எரேமி 30 : 22) ஆகையால் கர்த்தரே நமக்கு முன்பாக போகிறவர்.  தேவ ஜனங்களாக ஆட்டுமந்தையை நடத்தி செல்லும் நல்ல மேய்ப்பன், பிரதான மேய்ப்பன் அவர்.  அநேக வேளையில் மாநகரங்களில் அரசியல் தலைவர்கள் செல்லும்போது அனைத்து வாகனங்கள் போவது நிறுத்தப்பட்டு தலைவர்களின் வாகனங்கள் முன்னும், பின்னும் விலையேறப்பெற்ற பாதுகாவலர்களின்  பாதுகாப்புடன் செல்லும்.  அதுபோல தான் நம்முடைய தேவன் தம்முடைய ஜனங்களுக்கு முன்பாக செல்லுவார்.  முழு இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அப்படித்தான் நடத்தி சென்றார்.  தம் தாசனாகிய மேசேயை பார்த்து என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்.  நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் (யாத் 34 : 14) என்றார்.  யோசுவாவுக்கு தேவன் தந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர் அப்படியே நிறைவேற்றினார்.  யோசுவா 3-ம் அதிகாரத்தை வாசித்து பாருங்கள்.

இதோ, சர்வபூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.  (யோசுவா 3 :  11)  யோர்தான் நதி தேவ ஜனங்களுக்கு குறுக்காக இருந்தபோது தேவனுடைய மகிமை விளங்கும் உடன்படிக்கைபெட்டி அதாவது தேவனே முன்பாக கடந்துசெல்கிறார்.  யோர்தானில் வெள்ளம் இருபுறமும் குவியலாய் நின்றது.  தேவஜனங்கள் உலர்ந்த தரைவழியாக கடந்து போகிறார்கள்.  அடுத்ததாக எரிகோ கோட்டை முன்பாக யோசுவாவும் தேவ ஜனங்களும் நிற்கிறார்கள்.  எரிகோவை பிடிக்க முடியாதபடி வாக்குத்தத்த கானான் தேசத்தில் நுழையவிடாதபடி கோட்டை நிற்பதை கண்டார்கள்.  எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.  (யோசுவா 6 :1)  ஆனால் அங்கும் தேவன் சொல்லியபடி அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள். (யோசு 6 : 6) தேவனுடைய மகிமை முன்பாக சென்றது.  எக்காளங்களை ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்.  எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது. (யோசு 6 : 20)

தேவன் தாம் சொன்படியே முன்பாக சென்றார்.  2009-ம் ஆண்டு திரும்பி பார்க்கும்போது ஒவ்வொரு கூட்டங்கள், முகாம்கள், திட்டங்கள் எல்லாம் நிறைவேற்ற கர்த்தர்தாமே முன்பாக சென்றதை நாங்கள் அனுபவிக்க முடிந்தது.  எனக்கன்பானவர்களே இந்த வருடத்தில் தாமே கர்த்தர் உங்களுக்கு முன்பாக செல்வார்.  வாழ்க்கைப் பாதையில் அவர்தாமே உங்களுக்கு முன்பாக செல்வார்.  இதை வாசிக்கும்போதே உங்கள் முன்பாக காணப்படும் யோர்தான் நதிகள், எரிகோ கோட்டைகளை உடைத்து தேவன்தாமே வழிகளை உண்டுபண்ணுவார்.  உங்களை நடத்திச் செல்வார்.

அவர் உன்னோடே கூட இருப்பார்:-

அவர் உன்னோடே கூட இருப்பார்.  அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை(உபா 31 : 8) இந்த வாக்குத்தத்த வார்த்தை மோசே யோசுவாவுக்கு கூறி பெலப்படுத்தினார்.  மோசே மரித்தபின்பு யோசுவாவுடன் தேவனே பேசும்போது இதே வார்த்தைகளை கூறி பெலப்படுத்தினார்.  நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை.  நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்.  நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (யோசுவா 1 :5) கர்த்தர் நம்மோடு கூட இருப்பது எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்று வேதம் சொல்லுகிறது.  தேவன் ஈசாக்கோடு கூட இருந்து அவனை ஆசீர்வதித்தார்.  ஈசாக்கு அந்த தேசத்தில் விதை விதைத்தான்;   கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான். (ஆதி 26 : 12) ஆதியாகமம் 39-ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள்.       4 முறை கர்த்தர் யோசேப்போடு கூட இருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அவன் அடிமையாக விற்கப்பட்ட இடத்திலும் தேவன் அவனோடு கூட இருந்தபடியால் போத்திபார் ஆசீர்வதிக்கப்பட்டான்.  சிறைச்சாலை தலைவன் கண்களில் யோசேப்புக்கு தயவு கிடைத்தது.

தாவீதின் வாழ்க்கையிலும் II சாமுவேல் 5 : 10-யை வாசித்து பாருங்கள்.  தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்;  சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடே கூட இருந்தார்.  பக்தன் தாவீதின் வாழ்க்கையில் பல நெருக்கங்கள், கஷ்டங்கள் மத்தியிலும் தேவனுடைய அபிஷேகமும், அவனோடு கூட கர்த்தர் இருந்தபடியால் ஏற்ற காலத்தில் நாளுக்கு நாள் விருத்தியடைந்தான் என்று பார்க்கிறோம்.  யோசுவாவின் சரித்திரத்தையும் பாருங்கள். “இவ்விதமாய் கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்;  அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று”. (யோசுவா 6 : 27) வாக்குத்தத்தம் பண்ணின கர்த்தர் யோசுவாவுடன் இருந்தார்.  அவன் கீர்த்தி தேசமெங்கும் பரவிற்று.  யோசுவா நினைத்திருக்கலாம்.  40 வருடங்கள் மோசே கூட இருந்தோம்.  அனைத்து காரியங்கள் திறம்பட நடத்தினோம்.  தைரியமாக இருந்தது.  ஆனால் மோசே இப்போது கடந்து போய்விட்டார்.  சில கால கட்டங்களில் மோசேக்கு விரோதமாக எவ்வளவுபேர் எதிர்த்தார்கள், கல் எரிந்தார்கள், தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாதபடி பிரிந்தார்கள்.  மனம் சோர்ந்துபோக வைத்தார்கள்.  இவ்வாறு என் அன்பான தலைவன் மோசே உடன் இல்லையே என்று அங்கலாய்த்தார்கள்.  ஆனால் பாருங்கள் யோசுவா 1 : 5-ல் “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன் நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை”.  என்று கர்த்தர் சொன்னார்.  மோசே இருந்த இடத்தில் இனி மனிதன் அல்ல நானே உன்னோடு கூட இருப்பேன் எவ்வளவு பெரிய வாக்குத்தத்தம்! நம்பிக்கை! மோசேயுடன் இருந்து எப்படி நடத்தினாரோ அதேபோல அதைவிட மேலாக கர்த்தரே உன்கூட இருந்து யோசுவாவை வழிநடத்தி  தேசத்தை சுதந்தரிக்கச் செய்தார்.  அதே ஆண்டவர் நம்மை பார்த்தும் சொல்லுகிறார்.  நானே உன்னோடுகூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்.  காத்து வழிநடத்துவேன்.  நம்பிக்கை தரும் தேவனுடைய வாக்குத்தத்திற்காக தேவனைத் துதிப்போம்.

நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம்:-

கடைசியாக தேவன் மோசே மூலமாக யோசுவாவுக்கு கொடுத்த வாக்குத்தத்த வார்த்தை நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம்.  எதிர்காலத்தை குறித்த பயம், தேவைகளை குறித்த கலக்கம்.  சுற்றிலுமுள்ள எதிராளிகளை குறித்த பயம்.  எப்படி வழிநடத்துவோம் என்ற கலக்கம்.  தேவன் யோசுவாவை பார்த்து சொன்னார்.  நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம்.  அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை தேவன் வைத்தார்.

உபாகமம் 34 : 9-யை வாசித்து பாருங்கள்.  மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்;  இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.  தேவன் யோசுவாவை ஞானத்தின் ஆவியால் நிரப்பினார்  ஒரு விசேஷித்த அபிஷேகத்தை தேவன் யோசுவாவின் மீது ஊற்றினார்.  அத்தனை கலக்கம், பயம் எல்லாம் நீங்கியது.  இயேசுவின் சீஷர்கள் சுமார் 120 பேர்கள் தங்கள் அறையை பூட்டி பயந்து இருந்தார்கள்.  இயேசுதாமே அவர்கள் நடுவில் வந்து உங்களுக்கு சமாதானம் என்று கூறினார்.  மட்டுமல்லாமல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்டார்.  அவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு சாட்சிகளாக பரிபூரண கிருபை பெற்றவர்களாக இயேசு கிறிஸ்துவின் இறுதி கட்டளையை நிறைவேற்றுகிறவர்களாக வல்லமையின் அபிஷேகத்தை பெற்று விளங்கினார்கள்.

இந்த கடைசிகாலம் பொல்லாத நாட்களாக உள்ளது.  இயற்கை சூழ்நிலைகளின் மாற்றம், நோய்களின் கொடுரத்தினால் உண்டாகும் மரணபயம், பிள்ளைகளை குறிப்பாக படிப்பு, உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், திருமணம் இவைகளை குறித்த பயம், கலக்கம் நமக்கு வருவதுண்டு.  மட்டுமல்லாமல் ஆவிக்குரிய வறட்சியின் நிமித்தம் சோர்வுகள், ஜெபவாழ்வில், வேதவாசிப்பில் பின்னடைந்திருக்கலாம்.  இந்த நாளில் தேவன் நமக்கு ஞானத்தின் ஆவியினால் நம்மை நிரப்ப விரும்புகிறார்.  முழங்காலில் நின்று யோசுவாவின் மீது மோசேயின் கரம் இருந்ததை போல் என் மீது உம் கரம் வைத்து என்னை உயிர்ப்பியும், அபிஷேகியும் என்று கதறுவோமாக.  தேவன் இந்தவருடம் புதிய அபிஷேகத்தினால், புது கிருபையால், புதிய  தரிசனங்களால் உங்களை நிரப்புவார்.  நாம் ஒன்றைக் குறித்தும் கலக்கமோ, பயமோ இல்லாதவர்களாய் கடந்து செல்வோம்.   Because I know, He who hold my future என்று பாடி முன் செல்லுவோம்.  தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

 

Christmas festival i.e., the glad tidings that Jesus was born as the Saviour of the world is a very delightful news.  That the Lord was born in this world – not to destroy but to save the sinner is a very pleasant news.  People who floundered in darkness, saw a great light.  What a great joy!  In these days, matters such as putting on new garments and new jewels, buying things  related to the festival, making yummy snacks, wining and dining, sending greetings to kith and kin, sending greetings through greeting cards, SMS, and E-mail, exploding crackers give us much joy and jollity.  But how is the real joy made possible?

Joy in seeing Christ Jesus

We do not get full joy in celebrating Christmas as a normal festival.  We will experience real joy only when Jesus is born in our hearts, as we accept him as our Saviour.  Unless Jesus is in our heart, in our home, and in our church, all these external things will become meaningless.  The  Bethlehemians told that there was no place for Jesus to be born.  Today in the hearts, homes and churches of most of the people , there is no room for Jesus. 

Some days back, I heard an entertaining story .  In a foreign country a black man went in search of a church and on hearing the sound of the church bells, he recognized a church.  What a joy he had!  Splendid steeple, eye-catching building, costly decorative articles, superb furniture, and musical instruments – all these he saw with bated breath.  And while he was about to enter the church, a white man stopped him.  “Sir, Please let me in to worship the Lord”, he pleaded the white man.  But the white man did not budge.  He told, “There is no place for you, black man.”  The white man pushed the black man out.  While he stood out in the street sorrowfully, he saw another man in front of the church.  Having been offended much, the black man clarified the situation.  Then the other man said to the black man, “I too have not been allowed to enter the church for the past 40 years.  Both of us are in the same boat.”  Then the black man said to him, “Sir, Who are you?”  “I am Jesus.”  Pat came the answer.

Dear Brothers, never celebrate Christmas having hearts, homes and churches without Jesus.  Let the joy that the shepherds, Hannah, Gideon and wise men be made available to us also!

The joy that comes out of praising the child Jesus

When we praise the Lord, extolling the birth of Christ Jesus, a tremendous joy will overflow in  our life.  God’s Kingdom is not a matter of eating and drinking but of righteousness, peace and joy which the Holy Spirit gives.  Sis. Sarah Nauroji too inserted and deployed this verse in one of her hymns.

Praise of the angels

When Jesus Christ was born, the heavenly host of angels came down as a crowd and sang songs in praise of the Lord.

“Glory to God in the highest, and on earth peace, goodwill towards men.” (Luke 2:14)

Praise of the Shepherds

The shepherds came to know of the birth of the Lord through the angels.  At once they hurried off and saw the baby lying in the manger.  They were highly surprised to see the child.  Yea, it was a pleasant surprise!

“And the shepherds returned, glorifying and praising God for all the things that they heard and seen, as it was told unto them.” (Luke 2:20)

        Praise of Simeon

At that time, there was a man named Simeon in Jerusalem.  He was a good, God-fearing man and was waiting for Israel to saved.  The Holy Spirit was with him and had assured him that he would not die before he had seen the Lord’s promised Messiah.  Led by the Spirit, Simeon went into the Temple.  When the parents brought the child Jesus into the Temple,  Simeon took the child in arms and gave thanks to God.(Luke 2:25-29)

      Hannah too praised the Lord

Eighty four-year-old Hannah, a widow, never left the Temple and she observed fasting prayer day and night and worshipped God.  That very same hour she arrived and gave thanks to God and spoke about the child to all who were waiting for God to set Jerusalem free. (Luke 2:25-29)

    Mary too praised the Lord

After three days, they found him in the Temple, sitting with the Jewish teachers, listening to them and asking questions.  All who heard him were amazed at his intelligent answers.

   Elizabeth who enjoyed in Spirit

When Elizabeth heard Mary’s greeting, the baby moved within her.  Elizabeth was filled with the Holy Spirit.  She said to Mary, “As soon as I heard your greeting, the baby within me jumped

with gladness.”  When we praise Jesus being filled with the Holy Spirit, along with the joy that comes by accepting Jesus as our Saviour, we will be filled up with real joy.

The joy that we receive by proclaiming gospel

Do you know the climax of Christmas celebration? 

The joy and happiness that we attain must be available to this world too.  After fulfilling all things, if we do not proclaim gospel to even a single person, we cannot get complete joy.  One day when I sat down to have dinner in a house, I saw a wall-poster where it was written thus: “To double your joy, share it with others”.

Just go through the gospels…

The comet guided the wise men and brought them to the spot where Jesus was born.

The angels descended from heaven and announced the good news to the shepherds.

The shepherds made the good news known - they heard, known, seen and received – to others.

Jesus came into this world not only for us, not only for Christians.  During this Christmas season, everyone of you invite at least two families who are unaware of Jesus  and proclaim Jesus.  Lead them to your local church.  There will be great joy in heaven on account of a soul that repents unto salvation.  Let that joy and delight fill us these days.   Every believer amongst our Bhil people who have heard this news have decided to proclaim gospel to those who are unsaved,  offer them dinner and bring them to the church.  Let us also announce the glad tidings.  Let us double our joy.  Heaven will also rejoice!

Today is the day proclaiming gospel!  Glory be to God in the highest!

We wish you all a merry Christmas

 Rt.Rev.Dr.V.Devadass,

Sharing Love Mission, Gujarat.

Back to Message Home

        Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு