ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
தேவ செய்திகள் ^

English Version

ஜெபமே ஜெயம்” சிறப்பு செய்தி: சகோதரி. வஹிதா தேவதாஸ்

 

 

Back to Message Home

““ஜெபமே ஜெயம்! ஜெபம் மனிதனுடைய வாழ்க்கையை மறுரூபமாக்குகிறது! ஜெபம் தேசத்தை அசைக்கிறது! ஜெபம் தேசத்திற்கு ஷேமத்தை கொண்டு வருகிறது.”

சுமார் 16 வருடங்களுக்கு முன்பாக பாஸ்டர். பால்யாங்கிசோ, கொரியா தேசத்தை சேர்ந்தவர்கள் 10 இலட்சம் அங்கத்தினர்களை கொண்ட சபையை உருவாக்கினவர்கள், கொரிய தேச எழுப்புதலில் பெரிய பங்கை பெற்றவர்கள் சென்னை பட்டினம் வந்து, தமிழ்நாட்டில் உள்ள பாஸ்டர்களுக்கென்று விசேஷ கருத்தரங்கு நடத்தினார்கள். இந்த கருத்தரங்கில் குடும்பமாக பங்குபெற்றோம். அப்பொழுது அவர்கள் கூறிய காரியம், கொரியா தேசத்தின் எழுப்புதலுக்கு காரணம் என்னவென்று அறிய வாஞ்சையோடு இருக்கிறீர்கள் அல்லவா? என்னுடைய பதில் ஒன்றே ஒன்றுதான். அது ஜெபம், ஜெபம்தான் கொரியாவில் எழுப்புதலை கொண்டு வந்தது என்று பிரசங்கித்தார்கள். மறுநாளில் என்ன செய்தி கொடுப்பார்கள் என்று ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த செய்தி ஜெபம்தான். மூன்றாவது நாளில் ஜெபத்தை குறித்தே பேசி கருத்தரங்கு முடிவு பெற்றது. அந்த கருத்தரங்கில் ஜெபத்தை குறித்த காரியத்தில் என்னை தொட்ட காரியம் என்னவென்றால், கொரியாவில் உள்ள பாஸ்டர் பால்யாங்கிசோ அவர்கள் சபையில் உள்ள சாதாரணமான விசுவாசிகளும், சிறுகுழந்தைகளும் தினமும் ஒரு மணி நேரம் ஜெபிப்பார்களாம். மட்டுமல்லாமல், அவர்கள் சபையில் உள்ள உதவி பாஸ்டர்கள் 800 பேர் தினமும் மூன்று மணி நேரம் ஜெபிப்பார்களாம். தலைமை போதகரான பால்யாங்கிசோ அவர்கள் தினமும் ஏழு மணி நேரம் ஜெபிப்பார்களாம். இந்த காரியம் என்னுடைய ஜெப வாழ்க்கையில் ஒரு எழுப்புதலை கொண்டு வந்தது. அந்த நாளிலிருந்து என்னுடைய ஜெப வாழ்க்கை மாறியது. ஒரு விண்ணப்பத்தின் ஆவி ஊற்றப்பட்டது. அதே காரியத்தை பீல் மக்கள், விசுவாசிகளுக்கும் அறிவித்து ஜெபித்தபோது, ஷாலோம் சபைகளிலும், படிப்பறிவில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், வாலிபர்கள் எல்லார் மேலும் ஒரு ஜெப விண்ணப்பத்தின் ஆவி ஊற்றப்பட்டது. வெகு விரைவில் சபை வளர்ச்சியை கண்டோம். இப்பொழுதும், ஜெபத்தைக் குறித்து 4 காரியங்களை தியானிப்போம். தனி ஜெபம், குடும்ப ஜெபம், நண்பர்கள் ஜெபம், சபையார் ஜெபம், ஜெபம் ஜெயத்தைக் கொண்டு வரும். எழுப்புதலை கொண்டு வரும். தனி ஜெபம் இயேசுவை அறிந்த நாம் யாவருக்கும் தனி ஜெபம் அவசியம், அதிகாலையிலே எழும்பி தேவனுடைய சமுகத்தில் தனியாக அமர்ந்திருந்து உறவாட வேண்டும். தனிப்பட்ட முறையில் நமக்கும் தேவனுக்கும் ஒரு சம்பந்தம் வேண்டும். தனிப்பட்ட முறையிலான உறவு இல்லையென்றால், நாம் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்க முடியாது. தனி ஜெபம் தனிப்பட்ட மனிதர்களுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. உதாரணமாக, ஆதி.32 : 24-ல் பாருங்கள் யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது தேவன் அவனோடு உறவாடினார். ஆதி 32:26-29 வசனத்தில் யாக்கோபு, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்று கூறி, தேவனோடு தனியாக போராடி ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டான். ஆம் பிரியமானவர்களே, ஆசீர்வாதம் என்றால் எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் தனியாக ஜெபிக்க வேண்டுமென்றால் நேரம் இல்லை என்பார்கள். தின ஜெபம்தான் மனிதனுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. அடுத்தபடியாக தனி ஜெபத்தில் தேவனுடைய வழிநடத்துதல் கிடைக்கும். ஆதி 24 : 7-ம் வசனத்தில் ஆபிரகாம் தன்னுடைய குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் கொண்டுவரும்படிக்கு, தன்னுடைய ஊழியக்காரரான எலியேசரிடம் கூறுவதை பார்க்கிறோம். தேவன் தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார் என்று கூறி, காரியத்தை எலியேசரிடம் ஒப்புக்கொடுப்பதை பாருங்கள். எப்படி தன்னுடைய ஒரே குமாரனுக்கு பெண் பார்க்கும் காரியத்தை தன்னுடைய ஊழியக்காரரின் கையில் ஒப்புக்கொடுக்க முடியும் என்று நினைத்தால் மிக ஆச்சரியமாக உள்ளது. ஆனாலும், உண்மை என்னவென்றால் எலியேசர் கர்த்தருக்கு பயந்தவன். கர்த்தரை முன்பாக நிறுத்தி ஜெபிப்பவன் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தான். ஆதி 24 : 11,12 இந்த காரியத்தை ஆபிரகாம் கூறின உடனே, எலியேசர் தனக்குள்ளே ஜெபிக்க ஆரம்பித்தான். என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கார்த்தாவே இன்றைக்கு நீர் எனக்கு காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தயவு செய்தருளும் என்று தனியாக ஜெபிக்கிறான். ஆதி 24 :45-ல் இதை தன் இருதயத்தில் சொல்லி முடிக்கும்முன்னே ரெபேக்காளை காண்கிறான். ஆதி 24 : 48-ம் வசனத்தில் மறுபடியும் தலைகுனிந்து கர்த்தரை பணிந்துகொண்டு என்னை நேர்வழியாய் நடத்தி வந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். ஆம் பிரியமானவர்களே! தனி ஜெபம் நம்மை கர்த்தருடைய வழியில் நடத்தும், நேர் வழியில் நம்மை நடத்தி செல்லும். நம் வாழ்க்கையில் எந்த காரியமானாலும் நாம் தனியாக ஜெபிக்கும்போது கர்த்தரால் வழிநடத்தப்படுவோம். குடும்ப ஜெபம் “குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு” என்பது வழக்க சொல். அது உண்மை. குடும்ப ஜெபம் தான் குடும்பத்தைக் கட்டும். பாதுகாக்கும். இரட்சிக்கும். ஆதியாகமம் 6 : 9-ல் நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும், உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் 6 : 18-ல் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடே கூட உன் குமாரரும், உன் மனைவியும் உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசியுங்கள். ஆதியாகமம் 7 :1-ல் இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பாருங்கள் தேவன் பூமியை அழிக்க இருந்த திட்டத்தில் அந்த நாட்களில் இந்த சந்ததியில் நோவாவின் முழு குடும்பம் பாதுகாக்கப்பட்டது. நோவா மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தாரும் கர்த்தரை குறித்த அறிவை பெற்றிருந்தார்கள். குடும்பமாய் விசுவாசித்திருந்தார்கள். எந்த பிள்ளையோ, மருமக்களோ, மனைவியோ எதிராகப் பேசவில்லை. காரணம் குடும்பமாக கர்த்தரை சேவித்தார்கள். நோவாவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். ஆகையால் கர்த்தர் முழுக்குடும்பத்தையும் பாதுகாத்தார். இன்னும் கூட, உலகத்தில் என்ன நடந்தாலும், சுனாமியோ, பூமி அதிர்ச்சியோ, விஷக்காய்ச்சலோ, தீவிரவாதமோ, எந்த பயமோ வந்து நெருக்கினாலும் நீங்கள் குடும்பமாய் ஜெபித்து தேவனை தொழுது கொண்டால், உங்கள் குடும்பம் முழுவதும் பாதுகாக்கப்படும். அடுத்தபடியாக யோபு 1 : 5-ல் பார்க்கிறோம். யோபு தன் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும், தகனபலிகளை செலுத்தியுள்ளான் என்பது தெரிகிறது. யோபு தன்னுடைய குமாரர் ஒரு வேளை பாவம் செய்து, தேவனை தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளை செலுத்துவான். இந்தப் பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான். குடும்பமாக பிள்ளைகளுக்காக, யோபு மன்றாடினதை பாருங்கள். யோபு ஒரு நல்ல தகப்பன். யோபுவை குறித்து கர்த்தரே சாட்சி கொடுக்கிறார். கர்த்தர் பிசாசிடம் சவால்விடுகிறார். என் தாசன் யோபு, உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன், அவனைப் போல் பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு தன் குடும்பத்திற்காக, குடும்பமாக பலிகளை செலுத்தினவன். அவன் குடும்பத்தில் வந்த பெரிய சத்துருவின் போராட்டத்திலிருந்து அவன் வெற்றி பெற்று, இரட்டத்தனையான ஆசீர்வாதத்தைப் பெற்றான். பிரியமான தேவ பிள்ளைகளே, இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் கூட, பிசாசின் போராட்டம் என்றும், பில்லிசூனியம் என்றும் மிகவும் பயந்து நடுங்குகிறார்கள் ஏன்? குடும்பத்தில் தவறாமல் குடும்ப ஜெபம் ஏறெடுத்தால், பிசாசின் மேல் வெற்றியை மேற்கொண்ட யோபுவை போல நாமும் வெற்றி பெறலாமே. அப் 10 :2-ல் கொர்நேலியு குடும்பத்தை பாருங்கள். அவன் தேவ பக்தியுள்ளவனும், தன் வீட்டாரனைவரோடும் கூட தேவனுக்கு பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்து எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தான். வீட்டாரனைவரோடும் கூட தேவனை நோக்கி ஜெபம்பண்ணி கொண்டிருந்தான். அவனுடைய ஜெபம், தருமங்கள் தேவசந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. ஆகையால் தேவன் தம்முடைய ஊழியக்காரரான பேதுருவை அனுப்பி அவர்களுடைய முழு குடும்பத்தையும் இரட்சித்தார். அபிஷேகித்தார், மட்டுமல்லாமல் (அப் 10 : 24) கொர்நேலியுவின் உறவின் முறையாரையும், அவனுடைய விசேஷித்த சிநேகிதரையும் வரவழைத்து ஜெபித்தான். அந்த நாளிலே பேதுரு மூலமாக அனைவரும் இரட்சிப்பையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றுக்கொண்டார்கள். .

ஆகவே நாம் குடும்பமாக ஜெபிக்கும்போது நமது குடும்பம் இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல், நமது உறவினர்கள், சிநேகிதர்களும் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வது நிச்சயம். நண்பர்கள் ஜெபம் இயேசுவோடு கூட 12 சீஷர்கள் இருந்தாலும் பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக இயேசுவோடு இருந்தார்கள். லூக் 9 : 28, 29-ம் வசனத்தில் இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின் மேல் ஏறினார். அவர் ஜெபம் பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகி பிரகாசித்தது. நண்பர்கள் தேவனுடைய மகிமையின் பிரகாசத்தை கண்டார்கள். நாமும் நண்பர்களோடு இணைந்து ஜெபித்தால் தேவனுடைய மகிமையை காணலாம். தரிசனங்களை காணலாம். நம்முடைய முகமும் மாறி நாம் தேவசாயலை அடையலாம். சந்தோஷம், மகிழ்ச்சி உண்டாகும். அப் 16 : 25-30 வசனங்களில் பவுலும், சீலாவும் நண்பர்கள். இணை ஊழியர்கள், இவர்கள் சேர்ந்து ஊழியம் செய்து வந்தார்கள். ஆனால் ஒருநாளில் அநேக அடிகள் பட்டு, சிறைச்சாலையில் இருக்கும்போது கூட இரண்டு பேரும் ஜெபம்பண்ணி, தேவனை துதித்துப் பாடினார்கள். அப்பொழுது சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாய் பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. என்ன ஆச்சரியம்! உபத்திரவ நேரத்திலும் இரண்டு நண்பர்கள் இணைந்து நடுராத்திரியிலே ஜெபிக்கும்போது அவர் தங்களுடைய கட்டுகளும், மற்றவர்களுடைய கட்டுகளும் தெறிப்பட்டன. மட்டுமல்லாமல் சிறைச்சாலை அதிகாரி குடும்பமும், அவனோடு கூட அனைவரும் இரட்சிப்பைப் பெற்று ஞானஸ்நானம் பெற்றார்கள். மட்டுமல்லாமல் அப்-16 : 13-ல் பவுலும், தீமோத்தேயுவும் நல்ல நண்பர்கள். இவர்களும் ஓய்வுநாளில் பட்டணத்திற்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடத்தில் இருந்து ஜெபம்பண்ணி வந்தார்கள் என்று தெரிகிறது. இவ்வாறு ஜெபித்ததினால் தான் ஐரோப்பா கண்டத்தின் முதல் விசுவாசியாக லீதியாள் என்ற பெண்ணை தேவன் தெரிந்துகொண்டார். மத் 18 – 19,20-ன்படி இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்த காரியத்தை குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும். மட்டுமல்லாமல், லேவி 26 : 8-ன் படி உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; ஆகையால் நண்பர்களாய் சேர்ந்து, வீணான காரியங்களை குறித்து பேசி நேரத்தை வீணடிக்காதபடி, ஒருமனதோடு சேர்ந்து ஜெபி்த்து பெரிய காரியங்களை தேவனுக்காக செய்வோம். சபையாக ஜெபம் சபையாராக விசுவாசிகளாக கூடி ஜெபிக்க வேண்டும். ஆதிகால திருச்சபையினர் எல்லாரும் ஒன்றுகூடி ஜெபித்தார்கள். அப் 4 : 30-32 வசனங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயம், ஒரே மனதுடையவர்களாய் ஜெபித்தார்கள். அப்பொழுது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தை தைரியமாய் சொன்னார்கள். சபையில் ஜெபிக்கும்போது, மூன்று காரியங்கள் நடந்ததை பார்க்கிறோம். இடம் அசைந்தது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். தைரியமாய் தேவ வசனத்தை சொன்னார்கள். ஆம் பிரியமானவர்களே சபையார் ஜெபிக்கும்போது நிச்சயம் நமது இடம் அசைக்கப்படும். சுற்றியுள்ள புற இன மக்கள் அசைக்கப்படுவார்கள். மட்மல்லாமல், வசனத்தை மக்களுக்கு எடுத்து கூறும் தைரியத்தை பெறுவார்கள். சாட்சியாய் வாழ முடியும். அடுத்தப்படியாக அப் 12 : 5-ல் பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். நடந்த காரியம் என்ன? சபையாருடைய ஜெபத்தை கேட்டு, தேவன் ஒரு தூதனை அனுப்பி தமது ஊழியரை விடுவித்தார். சபையானது போதகருக்காக, ஊழியர்களுக்காக, ஜெபிக்க வேண்டும். அப்பொழுது, கர்த்தர் கேட்டு தமது ஊழியர்களை பாதுகாப்பார். மட்டுமல்லாமல், 2 நாளா 7 : 14 –ல் என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணி என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷெமத்தைக் கொடுப்பேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆகையால் அவருடைய நாமம் தரிக்கப்பட்ட பிள்ளைகளான விசுவாசிகள் ஒன்றுகூடி ஜெபிக்கும்போது தேசத்திற்கு ஷேமம் உண்டாகும். கடைசியாக இயேசுவுடன் அவருடைய சீஷர்கள் மூன்றரை வருடம் ஊழியம் செய்யும்பொழுது அநேக அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டார்கள். ஆனாலும் கூட, இயேசுவிடம் அற்புதம் அடையாளங்கள் எப்படி நடக்கிறது? எங்களுக்கு கற்றுத்தாரும் என்று கேட்காமல், நாங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? எங்களுக்கு கற்றுத்தாரும் என்றார்கள். காரணம் என்னவென்றால், அவர்கள் இயேசுவிடம் கண்டகாரியம் அவர் எப்பொழுதும் ஜெபித்துக்கொண்டேயிருந்தார். ஜெபத்திற்கு பின்பு அற்புதம், அற்புதத்திற்கு பின்பும் தேவனை மகிமைப்படுத்தி ஜெபித்தார். ஆகையால் அவருடைய ஜெபம்தான், அவர் பிதாவோடு கொண்டுள்ள உறவுதான், அற்புத அடையாளங்களை கொண்டு வருகிறது என்பதை சீஷர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். இந்நாட்களில், ஊழியக்காரர்களும், விசுவாசிகளும்கூட தங்கள் கைகளினால் அற்புத அடையாளங்கள் நடக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள். ஆனால் ஜெபத்திற்கோ அதிக நேரம் கொடுப்பதில்லை. பிரியமானவர்களே! தேவனுடைய சமூகத்தை எவ்வளவு நாடுகிறோமோ அவ்வளவுக்கதிகமாய் தேவன் நம் மூலமாய் மகிமைப்படுவார்! இயேசு கெத்சமனேயில் கடைசியாக ஜெபிக்கும்போது தம்முடைய சீஷர்களை பார்த்து, நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடு கூட விழித்திருக்க கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார். ஜெபிப்போம்! ஜெயத்தைப் பெறுவோம்! தேசத்தை சுதந்தரிப்போம்! .

 

Sharing Love Mission, Gujarat.

Back to Message Home

        Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு