English Version
பீல் மக்கள் வாழும் மூன்று மாநிலங்களிலும்
குறிப்பாக தாகோத் (குஜராத்), பான்ஸ்வாடா (இராஜஸ்தான்), ஜாபுவா
(மத்தியபிரதேசம்) மாவட்டங்களில் பல கிராமங்களில் குடிநீர்
வசதிகள் கிடையாது. ஆங்காங்கே அரசாங்க உதவியுடன் தரப்பட்ட (Hand
Pump) ஆழ்குழாய்களில் தண்ணீர் வராது. அநேக Hand Pump-கள் உடைந்த
நிலையில் கேட்பாரற்று கிடக்கும். ஒருமுறை மத்தியபிரதேசம் ஜாபுவா
மாவட்டத்தில் டேபர் கிராமத்தில் கோடைகாலத்தில் கூட்டம் நடத்த
சென்ற போது அவர்கள் குடிப்பதற்கு கொடுத்த தண்ணீர் ஜில்லென
இருந்தது. எங்கிருந்து தண்ணீர் கொண்டு வருகிறீர்கள் என்று
கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில். சுமார் 1 கி.மீ மேடு, பள்ளங்கள்
தாண்டி அழுக்கான தண்ணீர் எடுத்து வந்ததாக கூறினார்கள். கண்ணாடி
டம்ளரில் ஊற்றியபோது அதில் எத்தனையோ கிருமிகள் சுற்றி வந்ததைக்
கண்டு அதிர்ச்சியடைந்தோம். வெயில் காலங்களில் குடிக்க 1 குடம்
தண்ணீருக்கு எவ்வளவோ தூரம் செல்ல வெண்டும் ஆடு, மாடு,
கால்நடைகளின் நிலைமை அதைவிட மிகவும் கஷ்டம்.
தேவ கிருபையால் CBN ஸ்தாபனத்திலிருந்து
தொலைபேசி அழைப்பு வந்தது. டாக்டர் பால் தினகரன் (இயேசு
அழைக்கிறார்) அவர்கள் நம் ஊழியத்தைப் பற்றி CBN ஸ்தாபன Director
உடன் பேசியபொழுது ஷாலோம் ஊழியத்தைப் அறிமுகம் செய்து
வைத்துள்ளார்கள். உடனே அவர்கள் பீல் ஆதிவாசி கிராமங்களுக்கு உதவி
செய்ய முன் வந்தார்கள்.
எனவே கடந்த சில ஆண்டுகளில் தேவ கிருபையால்
CBN ஸ்தாபன உதவியுடன் இதுவரை 106 கிராமங்களில் ஆழ்குழாய் மூலம்
குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. CBN ஸ்தாபனத்தார் நம் கிராம
விசுவாசிகளின் ஜெபத்தையும், விசுவாசத்தையும் கண்டு தேவனைத்
துதித்தார்கள். ஒரு கிராமத்தில் கூடHand Pump Failure ஆகாதபடி
அனைத்து கிராமங்களிலும் தேவன் நல்ல குடிநீரை கட்டளையிட்டார். CBN
ஸ்தாபனத்துடன் உள்ள Partnership உறவுக்காக தேவனைத் துதியுங்கள்.
Top^
|