English Version
ஆரம்ப
சுகாதார பயிற்சி - 2009
நமது ஷாலோம் சுதேச ஊழயர்கள் 70 பேர்களுக்கு
குஜராத், தாகோத்திலுள்ள நமது பயிற்சி கூடத்தில் வைத்து ஆரம்ப
சுகாதாரப் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சி ஏப்ரல் மாதம்
20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதை
தேவன் ஆசீர்வதித்துத் தந்தார். இந்த பயிற்சியை Dr.Mrs.Jolly
அவர்கள் ஒருங்கிணைத்து தர இணைந்து நடத்தித் தந்தார்கள். இந்த
முகாமில் ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு, HIV & எய்ட்ஸ்,
சர்க்கரை நோய், டி.பி, மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, அலர்ஜி,
ஆஸ்துமா போன்ற நோய்களைப் பற்றியும் அவைகளின் தன்மைகளைப் பற்றியும்
எடுத்துரைத்து விளக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வும்
முதலுதவியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த முகாமில் ஊழியர்கள்
மற்றும் மருத்துவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சியில் கலந்துகொண்ட
ஒவ்வொரு ஊழியரும் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக கற்றுக்கொண்ட
பயிற்சியைக் குறித்து சாட்சியளித்தார்கள். தேவனுக்கே மகிமை
உண்டாவதாக! Dr. Abel மற்றும் Dr. Inba அவர்கள் தலைமையில் தமிழ்
நாட்டிலிருந்து வந்து பயிற்சி கொடுத்த மருத்துவக் குழுவிற்காக
தேவனைத் துதிக்கிறோம். இந்த மருத்துவக் குழுவிற்கு எங்களது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Top^
|